புதன், ஜனவரி 28, 2009

விடியாத இரவுகள் !!!

(முதல் கவிதை)

விடிய விடிய படித்தேன்
விழித்திருந்து
விடிந்த பிறகும் படித்தேன்
வாழ்க்கை விடியுமென்று.

அப்பா பணம் அனுப்பினார்
மகன் பட்டணத்தில் படிக்கிறானென்று
பணத்தை செலவழித்தேன்
என் அப்பன் பணக்காரனென்று.


அக்கா கடிதம் போட்டாள்
நன்றாக படிக்க வேண்டும் என்று
அவளுக்கு பதிலனுப்பினேன்
நன்றாக படிக்கிறேனென்று.

படித்தேன் முடித்தேன்
பட்டமும் பெற்றேன்
மற்றவர்களைப் போல நானும்
முதல் தரத்தில் தேறினேன்.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில்
துள்ளி குதித்தேன்
வீட்டிலயும் வெளியுலும் முதல்
பட்டம் என்ற பெருமிதத்தோடு.

என் மகிழ்ச்சியும் சந்தோஷமும்
கொஞ்ச நாள் தான் நீடித்தது
என் மன கோட்டை
மணல் கோட்டையாய் சரிந்து விழுந்தது.

வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவதே
பெரிய வேலையாய் இருந்தது
வீட்டில் கொடுத்த கொஞ்ச பணமும்
செலவழிந்து போனது.



செய்வதறியாது திகைத்து நின்றேன்
கவலையில் கண்ணீர் விட்டேன்
கண் விழித்து படித்தது கானல் நீராய்
போனது என்று உணர்ந்தேன்.

பகலில் கிடைக்கும் வேலையை
செய்து விட்டு இரவில்
விசும்பிக் கொண்டிருந்தேன்
விரைவில் விடியுமென்று.

இரவுகள் இரவுகளாய் இருப்பதில்லை
இரவுகள் விடியாமலும் போவதில்லை
 

எனவே...
என் கஷ்டங்களும் இனி நீளுவதில்லை
என்று,  நம்பிக்கையில் நடமாடுகிறேன்
நல்லதொரு வேலை கிடைக்குமென்று...

விடியாத
இரவுகள் !!!
விடியட்டும் வெகு விரைவில் ...!!!


 

2 கருத்துகள்:

  1. அருமையான வரிகள் தோழா .. வாழ்த்துக்கள்

    அதேவேளை
    எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு