வெள்ளி, ஜனவரி 30, 2009

நிழற்குடை...

என்று தணியும் இந்த
தீராத தாகம். என் கருணை மனு
நிராகரிக்கப் பட்டதோ?

ரோட்டோரம் நிற்கும்
நிழர்குடயில் தனிமையில்
தவித்து நிற்கிறேன்...

உன்னை தரிசிக்கும் தருணம்
விரைவில் கிடைக்குமென்ற
எண்ணத்தில்...

தினமும் நிழர்குடயில்
நிற்கும் என்னை
பார்த்து விட்டு ...

பார்க்காதவள் போல
செல்கிறாய். அடியே நீ மட்டும்
ஏனடி இப்படி?

உன்னால் மட்டும்
எப்படி என்னை
ஏமாற்ற முடிகிறது?...

பெருமழை அடித்தும்
சாயாத என்னுடைய
நாணல் மனம்

உன் கடைக் கண் பார்வையில்
வில்லாய் ஒடிந்து போன
மாயம் என்ன?...

உனக்காக காத்து காத்து
என் இரண்டு கால்களும்
மறுத்து போய் விட்டது...

அந்த நிழற் குடையே எனக்கு
நிற்க நிரந்தர இடம்
கொடுத்து விட்டது...

பயணிகள் பரிதாபமாய் என்னை
பார்க்க திக்கற்றவனாய்
திகைத்து நிற்கிறேன்...

எல்லாவற்றையும் தாங்கி
கொள்கிறேன். எதற்காக
தெரியுமா?...

உன் திருக் கரம் என்றாவது
ஒரு நாள் என் மீது படும்
என்ற நம்பிக்கையில்...

2 கருத்துகள்:

  1. கவிதை நல்லாயிருக்கு ஆனா கொஞ்சம் எழுத்துப்பிழையிருக்கு..திருத்தினால் நன்றாயிருக்கும் :-)

    பதிலளிநீக்கு
  2. \\உனக்காக காத்து காத்து
    என் இரண்டு கால்களும்
    மறுத்து போய் விட்டது...\\

    அருமையா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு