புதன், ஏப்ரல் 24, 2013

சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

"தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார்க்கு
தோன்றின் தோன்றாமை நன்று" - 

இந்த திருக்குறளை சச்சினுக்கு இந்த இனிய பிறந்த நாளில் சமர்ப்பிக்கிறேன். சச்சினை பற்றிய அறிய தகவல்களை உங்களுக்கு தருகிறேன்.

முதன் முதலா ப்ரஸ் மீட் ல கோவப்பட்ட சச்சின்...

         பொதுவாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வது சச்சினின் வழக்கம்.ஆனால், ஒரு சந்திப்பில் ஒரு நிரூபர் " நீங்கள் பணம் சம்பாதிக்கத் தானே கிரிக்கெட் ஆடுகிறீர்கள்" என்று கேட்டார். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வேளையில் கோபப் பட்ட சச்சின் பதிலளித்தார். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு வயது 10. 10 வயது சிறுவனுக்கு விளையாடும் ஆர்வம் தான் இருந்திருக்குமே தவிர, பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியளவும் வராது. அப்படி யென்றால்,இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பணத்திற்குத் தான் ஆடுகிறார்களா? என்று அந்த நிரூபரை கேட்டார். சச்சின் கோபப்பட்ட முதல் மற்றும் கடைசி பத்திரிக்கை சந்திப்பு அது தான். 

கேப்டன் பதவியை ஏன் சச்சின் நிராகரித்தார். இதுவரை வெளிவராத தகவல்.

  அது மேற்கிந்தியத் தீவுகள் சென்று விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கேப்டன் என்ற முறையில் சச்சினுக்கும் அழைப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி சிறந்த இந்திய அணியை தேர்வு செய்து மேற்கிந்தியத் தீவுக்கு புறப்பட வேண்டும் என்று எண்ணினார் சச்சின். கூட்டம் ஆரம்பித்தவுடன் தேர்வுக்குழு தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.தன்னுடைய கருத்தை சொன்ன போது, குழு தலைவர்கள் அவரது கருத்தை ஏற்க மருத்து விட்டனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, மவுனத்தை கலைத்த சச்சின் குழு மீட்டிங்கில் இருந்து அவசரமாக வெளியேறி விட்டார். தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், "நான் சொல்லும்  கருத்தை கேட்காததற்கு எனக்கு எதற்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டும். இது எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. இனிமேல் இந்தியக் கிரிகெட் அணிக்கு தலைமை ஏற்க போவதில்லை" என்று புலம்பி இருக்கிறார். அன்று எடுத்த முடிவில் இன்றளவும் தெளிவாக இருக்கிறார் சச்சின். 

ஷேவாக் இந்திய அணியில் இடம் பிடிக்க சச்சின் தான் காரணம் ...

                1989 நவம்பர் கராச்சியில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி முதல்,  2001ம் ஆன்டு வரை சச்சின் இடைவெளி இல்லாமல் கிட்டத் தட்ட 84  போட்டிகள் ஆடியிருந்தார். இப்போது தான் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் கால் வலி தடுத்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் முட்டி வலி எப்படி பேசப் பட்டதோ, அந்த அளவுக்கு சச்சினின் கால் வலியும் பேசப்பட்டது. சச்சின் இல்லாத இந்திய அணி,  இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான முத்தரப்பு தொடருக்குசென்றது. சச்சின் இல்லாததால் சரியான துவக்க வீரராக பலரை தேர்வு செய்து கடைசியாக ஷேவாக்கை அழைத்து சென்றனர். சச்சின் இறங்க வேண்டிய இடத்தில் ஷேவாக் இறங்கினார். நியூசிலாந்துக்கெதிரான அந்த ஆட்டத்தில் 69 பந்துகளில் ஷேவாக் 19 பவுண்டரிகளுடன் சதமடிக்க அடுத்த சச்சின் என்று பாராட்டப் பட்டார். ஷேவாக் கூறுகையில் " சச்சின் என்னுடைய கிரிக்கெட் தெய்வம். என்றுமே அவருக்கு நல்ல சீடனாகவே இருக்க விருன்புகிறேன் " என்று தன்னடக்கதோடு பதில் சொன்னார். பிறகு உலக அளவில் சச்சின், ஷேவக் ஜோடி பல்வேறு சாதனைகளை செய்ததுய் உலகமே அறியும்.

சச்சினின் மறக்க முடியாத ஆட்டம் - 1992ல் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2011ல் உலகக் கோப்பையை வென்றது (வாழ் ஆசை நிறைவேறியது)

பிடித்தவர்கள் - வினோத் காப்ளி, யுவராஜ் சிங், லாரா, ஜான்டிரோட்ஸ், டான் பிராட்மேன்

பிடித்த மைதானம் - ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம். (கடந்த வாரம் இந்த மைதானத்தில் இவருக்கு சிலை வைத்தது நினைவிருக்கலாம்)

பிடிக்காத மைதானம் - பெங்களூரு சின்ன சாமி ஸ்டேடியம்

பிடித்த வேறு விளையாட்டு - டென்னிஸ்

பிடித்த வசனம் - உனக்கு நீயே உண்மையாக இரு!

கனவு மங்கை  - காதல் மனைவி அஞ்சலி

சிக்கலானது - என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு என்னையே யாரென்று கேட்பது

பிடித்த படம் - கமிங் டு அமெரிக்கா

பிடித்த நடிகர்கள் - அமிதாப் பச்சன், நானா படேகர்.

பிடித்த உணவகம் - மவுரியா ஷெராடன், சிட்னி பார்க் ராயல் டார்லிங் ஹார்பர்.