திங்கள், ஜனவரி 04, 2010

பல கேள்வி, ஒரே பதில்

* பாரதப் போர் எத்தனை நாட்கள் நடந்தது?
* ராம - ராவண யுத்தம் எத்தனை மாதங்கள் நடந்தது?
* தேவ அசூர யுத்தம் எத்தனை நாட்கள் நடந்தது?
* பாரதப் போரில் எத்தனை வகைப் படைகள் பங்கு பெற்றன?
* மகா பாரதம் எத்தனை பர்வாக்களாக அமைந்துள்ளது ?
* பகவத் கீதை எத்தனை அத்தியாயங்களை கொண்டது?
* ஐயம் என்றால் சம்ஸ்கிருத மொழியில் எந்த எண்ணை குறிக்கும்?
* ராஜ நாகன் எத்தனை அடிகள் வரை வளரும்?
* "ஆக்டோ தேரிமோ" என்றால் என்ன?
* ஊட்டு பூட குறைந்த பட்ச வயது எத்தனை?
* கிசா பிரம்மீட்டில் பதிக்கப் பட்ட கல்லின் அகலம் எத்தனை அடி?
* சித்தர்கள் எத்தனை பீர்?
* பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எத்தனை?
 * புராணங்கள் எத்தனை?
* ஆடிப் பெருக்கை இப்படியும் சொல்லுவார்கள்?
* தென் அமெரிக்க பிராணி ஒன்று, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
* இலக்கிய கோமான் சோட்டன் எந்த வயதில் இறந்தான்?
 இது எல்லாத்துக்கும் ஒரே பதில் "பதினெட்டு".

ஞாயிறு, ஜனவரி 03, 2010

ஏ.சே.திலீப்குமார் (எ) ரஹ்மாஃன்.

வாழ்க்கைக் குறிப்பு:

ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது. இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எஸ். விஸ்வநாதன்" ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன்"உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் மின்சாரக்கனவும்,லகான் இந்தி படமும்,படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005
இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

தொடரட்டும் ஆஸ்கார் தமிழ் மகனின் சாதனைகள்