செவ்வாய், டிசம்பர் 22, 2015

எனது பயணம்

பயணம்.

               சிறு வயதில் என்னை எங்க எம்மா அடித்துவிட்டு அழுகையை சமாதனப்படுத்த ஒரு உக்தியை கையாள்வார்கள். "வா ஊருக்கு போலாம்" என்று சொல்லி விட்டால் உடனே கண்ணீரை துடைத்துவிட்டு அழுகையில் இருந்து மீண்டு வெளியே வந்து விடுவேன். ஆக, சிறு வயதிலேயே பயணம் என்னுடனும், நானும் பயணத்துடனும் ஒட்டி பிறந்த இரட்டையர்களாய் பயணம் செய்யத் தொடங்கி விட்டோம். எப்பொழுது பேருந்தில் ஏறினாலும் ஜன்னலோர இருக்கை என்பது இன்றளவும் சளைக்காமல் தொடர்கிறது.

சில பயணங்கள் சந்தோஷம் தரும்.
சில பயணங்கள் கஷ்டம் தரும்.
சில பயணங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்
சில பயணங்கள் ரசிக்க வைக்கும்.

இசைப்பயணம் :
                  பயணங்கள் எதுவாயினும் இசையுடன் பயணிப்பது எப்போதுமே சளைக்காத பயணமாகி ஏதோ ஒரு அர்த்தத்தை கொடுத்துவிடுகிறது. அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் இன்னும் எனர்ஜியை கூட்டி விடும். எல்லோரைப்போலவும் இசையை நான் சாதாரணமாக ரசிப்பதில்லை. நீண்ட தூரப் பயணத்திற்கு ஒரு தொகுப்பு, குறுகிய பயணத்திற்கு ஒரு தொகுப்பு, மலைப்பயணத்திற்கு ஒரு தொகுப்பு என பாடல்களையே தரம் பிரித்து ரசிப்பவன்.

                     ஏற்காடு, கொடைக்காணல், கல்வராயன்மலை போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்கையில் "செந்தாழம் பூவில்" என்ற பாடலை ரசித்துக் கேட்டால் மெய்மறந்து சந்தோஷம் கொள்ளும். அதே போல நதியே நதியே காதல் நதியே என்னும் பாடல் அருவிகளுக்கான பாடலாய் முனுமுனுப்பேன். எப்படி பயணத்தை என்னுடன் இருந்து பிரிக்க முடியாதோ, அதே போன்று, இசையையும் என்னுடைய ப்யணத்தில் இருந்து பிரித்து பார்ப்பது கடினம்.

புதிய பயணம் :
                     இதுவரை போகாத ஊருக்கு முதன் முறையாக பயணப்படுவது எபோதுமே மனசுக்கு சந்தோஷத்தை தரும். அப்படித்தான் முதன் முதலாக கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்கு முதன்முறையாக செல்கையில், போனிலேயே பேசிக்கொண்டிருந்தவரை நேரில் முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு போல அமைந்து விடுகிறது. புது நண்பனை சந்திக்கும் சந்தோஷம் மனசுக்குள் ஆர்ப்பரிக்கும். அந்த சந்தோஷத்தை எப்போதும் அளவிட்டு கூறிவிடமுடியாது.

பர்ஸ் தொலைத்த பயணம்.
                    எப்போதும் பயணத்தை ரசிக்கும் இந்த ரசிகனுக்கு, பண்டிகை கால பயணங்கள் பெரும்பாலும் சளிப்பையே தந்துவிடுகிறது. ஒரு முறை பொங்கல் விடுமுறைக்காக கூட்ட நெரிசலில் சிக்கிய ரோஜாவாய் நசுங்கி கொண்டு, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக் குறிச்சி ஏறினேன். ஏறின சில நிமிடங்களில், குருவி சேர்த்தது போல சேர்த்து வைத்த பர்ஸ் பணத்துடன் கையாடப்பட்டு விட்டது. கூட்டத்தில் யாரை கேட்பது. யாரோ புண்ணியவான் அபகரித்து விட்டான் போலும் என்று எண்ணி உடனடியாக அழாத குறையாய் இறங்கி அநாதையாய் தவித்து நின்றேன். சந்தோஷத்தை மட்டுமே தந்த அந்த பயணம் அழுகையை மட்டுமே கொப்பளிக்க வைத்தது. போலீஸ்காரர் ஒருவர் உதவியுடன் 25 ரூபாய் பெற்று வேலை பார்க்கும் இடமான புதுச்சேரிக்கு திரும்பி வந்து விட்டேன். அன்றுடன் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டேன்

ஆக எல்லா பயணங்களும் ஒன்று போல் அமைந்து விடுவதில்லை என்ற உண்மையை ஒரு ஒரு பயணமும் உணர்த்தி விட்டுத் தான் போகிறது ஓவ்வொரு முறையும்!

ரசிக்க கற்றுக் கொண்டால் எல்லாப் பயணங்களையும் இலகுவாக எதிர்கொள்ளலாம் என்ற உண்மையை சொல்லிக் கொடுக்கிறது ஒரு ஒரு பயணமும்!

ரசிக்க கற்றுக் கொண்டேன், அனைத்தையும்...

வாழ்க்கையும் ஒரு ஆடி அடங்கும் பயணம் தானே என்று !!!

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய சுவாரஸ்யங்கள்.


 • இதுவரைக்கும் நடந்த 7 Season- க்கும், இப்ப தொடங்கி இருக்குற 8வது Season- க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோணி தான் Captain...

 • அணியின் தற்போதைய  Coach முன்னாள் நியூசிலாந்து வீரர் Steaben Flemming..

 • IPL வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

 • ஒரு போட்டியில அதிக Runs எடுத்த List- ல Chennai Super Kings  246/5 2nd Place ல இருக்கு (2010 ல- ராஜஸ்தானுக்கு எதிராக  246/5 எடுத்து இருக்கு )

 •  2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பைய Win பண்ணி இருக்கு.

 • IPL League Matches-ல தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றிருக்கு. 

 • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிக Runs  எடுத்தவர் Suresh Raina . (111 Innings - 3325 Runs)

 • Chennai Super Kings , Mumbai Indians அணிக்கெதிரா 2013ல எடுத்த 79 Runs தான் Lowest Taem Score...

 • ஒட்டுமொத்தமா IPL-ல அதிக Run எடுத்தவர்கள்லயும் Suresh Raina  தான் 1st Place-ல இருக்காரு.

 • 2010- ல‌ அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் ரசிகர்கள் மத்தியில பிரபலாமா ஆச்சி..

 • சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிங்கற பேரு சங்க காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது.  அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும்.

 • சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செஞ்சிருக்கு.

 • முதல் மூன்று  IPL-லில் அரை இறுதிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்...

 • RCBக்கு எதிரா 2010 ல  Murali Vijay வெறும் 56 Balls- ல எடுத்த 127 ரன்   தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய பொறுத்தவரைக்கும் Highest individual score. 

 • தன்னோட சொந்த அரங்கத்துல (Chennai) விளையாடின எல்லா போட்டிகளிலும் Win பண்ண‌ 1st Team என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைச்சிருக்கு.

 • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்புல இதுவரைக்கும் MS Dhoni &  Suresh Raina 16 பந்துகள்ல 50 ரன்கள தொட்டு இருக்காங்க.

 •  2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் ஸ்டேடியத்துல‌ விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று சாதனை  படைச்சிருக்கு.

 • Most catches பிடிச்ச Players List- ல Suresh Raina 115 Matches-ல 60 Catches பிடிச்சி 1st Place-ல இருக்காரு.

புதன், ஏப்ரல் 24, 2013

சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

"தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார்க்கு
தோன்றின் தோன்றாமை நன்று" - 

இந்த திருக்குறளை சச்சினுக்கு இந்த இனிய பிறந்த நாளில் சமர்ப்பிக்கிறேன். சச்சினை பற்றிய அறிய தகவல்களை உங்களுக்கு தருகிறேன்.

முதன் முதலா ப்ரஸ் மீட் ல கோவப்பட்ட சச்சின்...

         பொதுவாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வது சச்சினின் வழக்கம்.ஆனால், ஒரு சந்திப்பில் ஒரு நிரூபர் " நீங்கள் பணம் சம்பாதிக்கத் தானே கிரிக்கெட் ஆடுகிறீர்கள்" என்று கேட்டார். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வேளையில் கோபப் பட்ட சச்சின் பதிலளித்தார். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது எனக்கு வயது 10. 10 வயது சிறுவனுக்கு விளையாடும் ஆர்வம் தான் இருந்திருக்குமே தவிர, பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியளவும் வராது. அப்படி யென்றால்,இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பணத்திற்குத் தான் ஆடுகிறார்களா? என்று அந்த நிரூபரை கேட்டார். சச்சின் கோபப்பட்ட முதல் மற்றும் கடைசி பத்திரிக்கை சந்திப்பு அது தான். 

கேப்டன் பதவியை ஏன் சச்சின் நிராகரித்தார். இதுவரை வெளிவராத தகவல்.

  அது மேற்கிந்தியத் தீவுகள் சென்று விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கேப்டன் என்ற முறையில் சச்சினுக்கும் அழைப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி சிறந்த இந்திய அணியை தேர்வு செய்து மேற்கிந்தியத் தீவுக்கு புறப்பட வேண்டும் என்று எண்ணினார் சச்சின். கூட்டம் ஆரம்பித்தவுடன் தேர்வுக்குழு தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.தன்னுடைய கருத்தை சொன்ன போது, குழு தலைவர்கள் அவரது கருத்தை ஏற்க மருத்து விட்டனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, மவுனத்தை கலைத்த சச்சின் குழு மீட்டிங்கில் இருந்து அவசரமாக வெளியேறி விட்டார். தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், "நான் சொல்லும்  கருத்தை கேட்காததற்கு எனக்கு எதற்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டும். இது எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. இனிமேல் இந்தியக் கிரிகெட் அணிக்கு தலைமை ஏற்க போவதில்லை" என்று புலம்பி இருக்கிறார். அன்று எடுத்த முடிவில் இன்றளவும் தெளிவாக இருக்கிறார் சச்சின். 

ஷேவாக் இந்திய அணியில் இடம் பிடிக்க சச்சின் தான் காரணம் ...

                1989 நவம்பர் கராச்சியில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி முதல்,  2001ம் ஆன்டு வரை சச்சின் இடைவெளி இல்லாமல் கிட்டத் தட்ட 84  போட்டிகள் ஆடியிருந்தார். இப்போது தான் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் கால் வலி தடுத்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் முட்டி வலி எப்படி பேசப் பட்டதோ, அந்த அளவுக்கு சச்சினின் கால் வலியும் பேசப்பட்டது. சச்சின் இல்லாத இந்திய அணி,  இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான முத்தரப்பு தொடருக்குசென்றது. சச்சின் இல்லாததால் சரியான துவக்க வீரராக பலரை தேர்வு செய்து கடைசியாக ஷேவாக்கை அழைத்து சென்றனர். சச்சின் இறங்க வேண்டிய இடத்தில் ஷேவாக் இறங்கினார். நியூசிலாந்துக்கெதிரான அந்த ஆட்டத்தில் 69 பந்துகளில் ஷேவாக் 19 பவுண்டரிகளுடன் சதமடிக்க அடுத்த சச்சின் என்று பாராட்டப் பட்டார். ஷேவாக் கூறுகையில் " சச்சின் என்னுடைய கிரிக்கெட் தெய்வம். என்றுமே அவருக்கு நல்ல சீடனாகவே இருக்க விருன்புகிறேன் " என்று தன்னடக்கதோடு பதில் சொன்னார். பிறகு உலக அளவில் சச்சின், ஷேவக் ஜோடி பல்வேறு சாதனைகளை செய்ததுய் உலகமே அறியும்.

சச்சினின் மறக்க முடியாத ஆட்டம் - 1992ல் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2011ல் உலகக் கோப்பையை வென்றது (வாழ் ஆசை நிறைவேறியது)

பிடித்தவர்கள் - வினோத் காப்ளி, யுவராஜ் சிங், லாரா, ஜான்டிரோட்ஸ், டான் பிராட்மேன்

பிடித்த மைதானம் - ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம். (கடந்த வாரம் இந்த மைதானத்தில் இவருக்கு சிலை வைத்தது நினைவிருக்கலாம்)

பிடிக்காத மைதானம் - பெங்களூரு சின்ன சாமி ஸ்டேடியம்

பிடித்த வேறு விளையாட்டு - டென்னிஸ்

பிடித்த வசனம் - உனக்கு நீயே உண்மையாக இரு!

கனவு மங்கை  - காதல் மனைவி அஞ்சலி

சிக்கலானது - என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு என்னையே யாரென்று கேட்பது

பிடித்த படம் - கமிங் டு அமெரிக்கா

பிடித்த நடிகர்கள் - அமிதாப் பச்சன், நானா படேகர்.

பிடித்த உணவகம் - மவுரியா ஷெராடன், சிட்னி பார்க் ராயல் டார்லிங் ஹார்பர்.

புதன், ஜூன் 20, 2012

மன நலம் பாதிக்கப் பட்ட அம்மா!!!

               எல்லோரும் வாழ்க்கையில் அம்மாவை தெய்வமாக வணங்குவார்கள். ஆனால் ரகு இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். எப்பொழுது தன்னுடய அம்மா இறப்பார்கள் என்று எதிர்பார்திருந்தான். காரணம் அவன் அம்மா மன நலம் பாதிக்கப்பட்டவள். காதலி, இதனாலயே அவன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தாள்.ரகுவின் மனதில் அவனுடய அம்மாவால் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.

                   ஒரு நாள் இவனும் எதிர் பார்த்த படியே அம்மா இறந்துவிட்டார்கள். ரகு தன்னுடய வீட்டை கழுவி, பெருக்கி, ஒரு கோவிலாக மாற்றினான். காதலிக்கு தன்னுடய வீட்டை காட்டினான்.ஒரு நாள் தன்னுடய காதலியுடன் கோவிலுக்கு சென்றான். அங்கே அவன் கண்ட விஷயம் அவன் மனதில் பேரிடியாய் விழுந்தது.தன்னுடய காதலிக்காக எந்த அம்மா இறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே அம்மா இல்லயே என்று கதறி அழுதான்.

                     காரணம்,  அங்கே முகம் தெரியாத ஒரு இளைனன் தன்னுடய மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவை, 3சக்கர வண்டியில் வைத்து கோவிலை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.அம்மா அது தான் நந்தி,அம்மா இது தான் தெப்பக்குளம் என்று, கவனிக்க முடியாத அம்மாவிடம் கவனமாய் விளக்கிக் கொண்டு இருந்தான். இவன் அம்மா என்று சொல்லுவது அவள் காதுகளில் கேட்காது என்று தெரிந்தும் அவன் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது , ரகுவின் மனதை இன்னும் கொஞ்சம் குத்துவதாய் இருந்ததது. மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவாக இருந்தாலும் அந்த இளைஙனுக்கு அம்மா இருக்கிறாள். 

ஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு????

                சில விஷியங்கள் இப்படித் தான் இருக்கும்போது தெரிவதில்லை.


செவ்வாய், ஜூன் 19, 2012

இசையின் திசையில்...

             சில இசைகள் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். சில இசைகளை கேட்டாலே மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி விடும். இப்படி  இசைகளை கேட்கத் தெரிந்த நமக்கு அந்த இசைகளின் ராகங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தவிர்க்க முடியாத சில ராகங்களை உங்களுக்கு தருவிதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1.'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்பாடல்
:
கங்கைக்கரை மன்னனடி
   
படம்
:
வருஷம்-16 (1989)
   
பாடியவர்
:
K.J.யேசுதாஸ்
   
இசையமைப்பாளர்
:
இளையராஜா

2. "ஆபோகிராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பாடல்
:
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
   
படம்
:
வைதேகி காந்திருந்தாள்(1984)
   
பாடியவர்
:
 ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
   
இசையமைப்பாளர்
:
 இளையராஜா
   பாடல்
:
கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்
   
படம்
:
சந்திரமுகி(2005)
   
பாடியவர்
:
 ஆஷா பான்ஸ்லே மதுபாலகிருஷ்ணன்
   
இசையமைப்பாளர்
:
 வித்யாசாகர்
 
3. ‘காபிராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :

 பாடல் ஹேபாடல் ஒன்று   படம் ப்ரியா (1978)   பாடியவர்  S.ஜானகி, K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர்  இளையராஜா.

பாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே   படம் மே மாதம் (1994)   பாடியவர்  ஜெயச்சந்திரன்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

பாடல் குச்சி குச்சி ராக்கம்மா   படம் பம்பாய்(1995)   பாடியவர்  ஹரிஹரன் குழுவினர்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

 பாடல் கண்ணே கலைமானே   படம் மூன்றாம் பிறை(1982)   பாடியவர்  K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர் இளையராஜா   இயற்றியவர் கண்ணதாசன்.

4. ‘மலையமாருதம்ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடுஎன்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.

1983ல் வெளியான ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜாஇசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய தென்றல் என்னை முத்தமிட்டது...என்ற பாடல்.

5.‘வாசந்தி’

1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய..."அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது!

1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்!


6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
 
1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.

“வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.

“ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.

“அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்!

சின்ன தம்பி படத்தில் குஷ்பூ
7.‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் 

பாடல் : காற்றில் என்றன் ஜீவன். படம் : ஜானி(1980) பாடியவர் : S.ஜானகி     இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990)     பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம்  இசையமைப்பாளர் : இளையராஜா.

பாடல் : போவோமா ஊர் கோலம், படம் சின்னத்தம்பி (1991) , பாடியவர் : சித்ரா  இசையமைப்பாளர் :இளையராஜா, இயற்றியவர் : வாலி'


வெள்ளி, ஜூன் 15, 2012

நினைவில் நின்றவை-1

                    நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு " உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது? எதற்காக அந்த கலரை பிடிக்கும்" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று  நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால்  இனிமே  நான் உங்க  நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.

அப்படி என்ன பேசினார்? ... 

               "எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது  சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்"? என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும்  தெரிந்தது. சிறிய  இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி  போட்டு இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...
 
மண்ணில் புதைப்பதற்கு பதில்
பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!

திங்கள், ஜனவரி 31, 2011

நான் ரசித்த ஹலோ எப்.எம்.
அக்டோபர் 2ம் தேதி 2006ம் தேதி சென்னை மக்களின் புதிய பொழுது போக்கு மற்றும் ஜனரஞ்சகமான விஷியங்களுக்காக , "நல்ல இசை, செல்லத் தமிழ்" என்ற தாரக மந்திரத்தோடு, சின்னக் குழந்தையாக, செல்லக் குழந்தையாக , ஹலோ எப்.எம் 106.4. இனிதே உதயமானது. அது வரை, ம்ற்ற‌ பண்பலைகளை கேட்டு, கேட்டு, போரடித்த சென்னை வாசிகளுக்கு, இது புது வரவு, அதிக மன நிறைவு, என்றே சொல்லலாம். நிகழ்ச்சிகளில் புதிய யுக்திகள் என்று மட்டுமில்லாமல், புதிய சிந்தனைகளுடன் படித்த அறிவாளி முதல், பட்டிக் காட்டு பாமரன் வரை, எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கும் கொட்டும் முரசாக மாறியதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக‌ சென்னை வாசிகளின் அசைகக முடியாத பேராதரவோடு, தமிழகத்தின் பண்பலை வரிசைகளில் முன்னனி இடத்தை பெற்று தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தது.
கிளைகளுடன், களைகளைப் போக்க!
அடுத்தடுத்தத் வருடங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் 7 இடங்களில், மற்ற நேயர்களின் களைகளை போக்க‌ கவலைகளை நீக்க, தனது கிளைகளை நிறுவியது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்றுக்கு ஏற்றது போல், கால் தடம் பதிக்கும் அனைத்து இடங்களிலும், வெற்றி பெற்றது. ஒருமுறை ஒரு நேயர் இந்த ஹலோ எப்.எம்‍மை
கேட்க தொடங்கி விட்டால், பிறகு இதை விட்டு வெளியேருவது கஷ்டம் என்ற, நல்ல நிலை தான் இதற்கு காரணம்.
அணல் பறக்கும் சாதனைகள்.
மற்ற ரேடியோ நிறுவனங்களுக்கும், ஹலோ எப்.எம் மின் நிகழ்ச்சிகளுக்கும் விதியாசங்க‌ள் அதிகம். இந்த ஒரு காரணத்துக்காகவே, அதிகப் படியான நேயர்களைப் பெற்றுள்ளது. களத்தில் விளையாடும் கிரிக்கெட்டைப் போலவே, விளையாட முடியும் என்பதை செய்து, சாதித்துக் காட்டியது, மிகப் பெறிய சாதனையே!. இதை பின் பற்றி இன்று, இதைப் போலவே நிறைய இடங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தொலை பேசியின் வாயிலாக நேயர்கள், ரன்களை கணித்து சொன்னால், பணத்தை வெல்லலம், என்பதே இதன் நோக்கம்.

பெற்றால் தான் பிள்ளையா?
இலாப நோக்கத்திற்க்காகவும், வர்த்தக ரீதியாகவும் மட்டுமே அடிப்படயாக ஆரம்பிக்கப் படும் சில மீடியா க்கலை ,பெற்றால் தான் பிள்ளையா? என்ற உயர்ந்த திட்டதின் மூலம் , இந்தக் கருத்துக்களை பின்னுக்குத் தள்ளியது, ஹலோ எப். எம் , மின் மிகப் பெறிய சாதனை. பி. எஸ். ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க
நேயர்களுடன் இணைந்து, தானும் ஒரு நேயராக, மனிதாபிமான மனிதனாக இணைந்தார், பத்ம ஸ்ரீ கமல்ஹாசன். எச்.ஐ.வி‍ யால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக தலா 750 ரூபாய் நிதியாக, ஹலோ எப். எம் , மின் நேயர்களிடமிருந்து பெறப் பட்டது. இதன் முதல் முயற்சியாக பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.
மட்டுமன்றி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நேயர்ரக, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ஈடுபட்டிருப்பதால் அதிகப் படியான விஷியங்களை உணர முடிகிறது.