வியாழன், ஜனவரி 29, 2009

ஒரு நாள் ஒரு கனவு...



நேற்று இரவு சரியாக
பனிரெண்டு மணி இருக்கும்
அயர்ந்த நித்திரை.
ஊரடங்கிப் போன "கும்" இருட்டு
எங்கு ஒரே அமைதி...

என் வீட்டு கதவு
தட தடவென்று திறக்கும்
சத்தம், என் காதுகளில்
கிணற்றில் கேட்டார் போல் கேட்டது...

எழுந்து திறக்க கூட
சக்தி இல்லாத சூழலில்
கண்ணை இருக்கும் ஆழ்ந்த உறக்கம்...

யாரோ என் தோளைத்
தொட்டு கூப்பிடும் சத்தம்
என் காதுகளில்
செவி மடுத்தன....

யார்? என்று திரும்பிப்
பார்த்த எனக்கு ஒரே
இன்ப அதிர்ச்சி, இல்லை
இன்ப அதிர்ச்சி!!!

எழுந்திரு எழுந்திரு என்று,
பதட்டமான குரலில்
என் கண்ணான கண்மணி
என் கண் முன்னே!!!

என்னடா இந்த இரவில்?
ஏன்டா வந்தாய்?
உனக்கு என்ன ஆச்சு? என்று
கேள்வி மேல் கேள்வி
கணைகளை தொடுத்தேன்...

"நேற்று நீ வேலைக்கு செல்லும்போது
எதிரே வந்த பேருந்து உன்
மீது மோதியதாக கனவு
ஒன்று கண்டேன்....

புரண்டு புரண்டு படுத்தேன்
தூக்கம் வரவில்லை
கண்ணை மூடினாலும் அந்த
விபத்து காட்சியே கண் முன்
வந்து வெடிக்கிறது...

அதனால் உன்னை ஒருகணம்
பார்த்து விட்டுப் போகலாம் என்று
யாருக்கும் தெரியாமல்
வந்தேன் என்றாள்...

என்ன சொல்வது என்று எனக்கு
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
அப்படி எல்லாம் நடக்காது
நீ ஒன்றும் பயப்படாதே,
இப்ப போய் படுத்து கொள்,
எதுவானாலும் காலையில்
பேசிக்கொள்ளலாம் , என்று
தட்டிக்க் கொடுத்து அனுப்பினேன் !!!

எனக்கு மனம் கேட்கவில்லை
என்னவள் தனியாக சென்றாளே
வீடு போய் செர்ந்திருப்பல என்று
எனக்குள் ஒரு பதட்டம்...

சட்டு புட்டென்று எழுந்து
நடந்தேன்- பிறகு தான் தெரிந்தது
நடந்ததெல்லாம் வெறும் கனவு என்று…

1 கருத்து: