புதன், ஜூன் 20, 2012

மன நலம் பாதிக்கப் பட்ட அம்மா!!!

               எல்லோரும் வாழ்க்கையில் அம்மாவை தெய்வமாக வணங்குவார்கள். ஆனால் ரகு இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். எப்பொழுது தன்னுடய அம்மா இறப்பார்கள் என்று எதிர்பார்திருந்தான். காரணம் அவன் அம்மா மன நலம் பாதிக்கப்பட்டவள். காதலி, இதனாலயே அவன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தாள்.ரகுவின் மனதில் அவனுடய அம்மாவால் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.

                   ஒரு நாள் இவனும் எதிர் பார்த்த படியே அம்மா இறந்துவிட்டார்கள். ரகு தன்னுடய வீட்டை கழுவி, பெருக்கி, ஒரு கோவிலாக மாற்றினான். காதலிக்கு தன்னுடய வீட்டை காட்டினான்.ஒரு நாள் தன்னுடய காதலியுடன் கோவிலுக்கு சென்றான். அங்கே அவன் கண்ட விஷயம் அவன் மனதில் பேரிடியாய் விழுந்தது.தன்னுடய காதலிக்காக எந்த அம்மா இறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே அம்மா இல்லயே என்று கதறி அழுதான்.

                     காரணம்,  அங்கே முகம் தெரியாத ஒரு இளைனன் தன்னுடய மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவை, 3சக்கர வண்டியில் வைத்து கோவிலை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.அம்மா அது தான் நந்தி,அம்மா இது தான் தெப்பக்குளம் என்று, கவனிக்க முடியாத அம்மாவிடம் கவனமாய் விளக்கிக் கொண்டு இருந்தான். இவன் அம்மா என்று சொல்லுவது அவள் காதுகளில் கேட்காது என்று தெரிந்தும் அவன் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது , ரகுவின் மனதை இன்னும் கொஞ்சம் குத்துவதாய் இருந்ததது. மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவாக இருந்தாலும் அந்த இளைஙனுக்கு அம்மா இருக்கிறாள். 

ஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு????

                சில விஷியங்கள் இப்படித் தான் இருக்கும்போது தெரிவதில்லை.


செவ்வாய், ஜூன் 19, 2012

இசையின் திசையில்...

             சில இசைகள் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். சில இசைகளை கேட்டாலே மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி விடும். இப்படி  இசைகளை கேட்கத் தெரிந்த நமக்கு அந்த இசைகளின் ராகங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தவிர்க்க முடியாத சில ராகங்களை உங்களுக்கு தருவிதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1.'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்



பாடல்
:
கங்கைக்கரை மன்னனடி
   
படம்
:
வருஷம்-16 (1989)
   
பாடியவர்
:
K.J.யேசுதாஸ்
   
இசையமைப்பாளர்
:
இளையராஜா

2. "ஆபோகிராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பாடல்
:
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
   
படம்
:
வைதேகி காந்திருந்தாள்(1984)
   
பாடியவர்
:
 ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
   
இசையமைப்பாளர்
:
 இளையராஜா
   



பாடல்
:
கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்
   
படம்
:
சந்திரமுகி(2005)
   
பாடியவர்
:
 ஆஷா பான்ஸ்லே மதுபாலகிருஷ்ணன்
   
இசையமைப்பாளர்
:
 வித்யாசாகர்
 
3. ‘காபிராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :

 பாடல் ஹேபாடல் ஒன்று   படம் ப்ரியா (1978)   பாடியவர்  S.ஜானகி, K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர்  இளையராஜா.

பாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே   படம் மே மாதம் (1994)   பாடியவர்  ஜெயச்சந்திரன்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

பாடல் குச்சி குச்சி ராக்கம்மா   படம் பம்பாய்(1995)   பாடியவர்  ஹரிஹரன் குழுவினர்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

 பாடல் கண்ணே கலைமானே   படம் மூன்றாம் பிறை(1982)   பாடியவர்  K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர் இளையராஜா   இயற்றியவர் கண்ணதாசன்.

4. ‘மலையமாருதம்ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடுஎன்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.

1983ல் வெளியான ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜாஇசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய தென்றல் என்னை முத்தமிட்டது...என்ற பாடல்.

5.‘வாசந்தி’

1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய..."அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது!

1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்!


6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
 
1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.

“வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.

“ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.

“அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்!

சின்ன தம்பி படத்தில் குஷ்பூ
7.‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் 

பாடல் : காற்றில் என்றன் ஜீவன். படம் : ஜானி(1980) பாடியவர் : S.ஜானகி     இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990)     பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம்  இசையமைப்பாளர் : இளையராஜா.

பாடல் : போவோமா ஊர் கோலம், படம் சின்னத்தம்பி (1991) , பாடியவர் : சித்ரா  இசையமைப்பாளர் :இளையராஜா, இயற்றியவர் : வாலி'










வெள்ளி, ஜூன் 15, 2012

நினைவில் நின்றவை-1

                    நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு " உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது? எதற்காக அந்த கலரை பிடிக்கும்" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று  நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால்  இனிமே  நான் உங்க  நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.

அப்படி என்ன பேசினார்? ... 

               "எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது  சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்"? என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும்  தெரிந்தது. சிறிய  இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி  போட்டு இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...
 
மண்ணில் புதைப்பதற்கு பதில்
பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!