புதன், ஜூன் 20, 2012

மன நலம் பாதிக்கப் பட்ட அம்மா!!!

               எல்லோரும் வாழ்க்கையில் அம்மாவை தெய்வமாக வணங்குவார்கள். ஆனால் ரகு இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். எப்பொழுது தன்னுடய அம்மா இறப்பார்கள் என்று எதிர்பார்திருந்தான். காரணம் அவன் அம்மா மன நலம் பாதிக்கப்பட்டவள். காதலி, இதனாலயே அவன் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வந்தாள்.ரகுவின் மனதில் அவனுடய அம்மாவால் தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது.

                   ஒரு நாள் இவனும் எதிர் பார்த்த படியே அம்மா இறந்துவிட்டார்கள். ரகு தன்னுடய வீட்டை கழுவி, பெருக்கி, ஒரு கோவிலாக மாற்றினான். காதலிக்கு தன்னுடய வீட்டை காட்டினான்.ஒரு நாள் தன்னுடய காதலியுடன் கோவிலுக்கு சென்றான். அங்கே அவன் கண்ட விஷயம் அவன் மனதில் பேரிடியாய் விழுந்தது.தன்னுடய காதலிக்காக எந்த அம்மா இறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே அம்மா இல்லயே என்று கதறி அழுதான்.

                     காரணம்,  அங்கே முகம் தெரியாத ஒரு இளைனன் தன்னுடய மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவை, 3சக்கர வண்டியில் வைத்து கோவிலை சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.அம்மா அது தான் நந்தி,அம்மா இது தான் தெப்பக்குளம் என்று, கவனிக்க முடியாத அம்மாவிடம் கவனமாய் விளக்கிக் கொண்டு இருந்தான். இவன் அம்மா என்று சொல்லுவது அவள் காதுகளில் கேட்காது என்று தெரிந்தும் அவன் இப்படி சொல்லிக் கொண்டிருந்தது , ரகுவின் மனதை இன்னும் கொஞ்சம் குத்துவதாய் இருந்ததது. மன நலம் பாதிக்கப் பட்ட அம்மாவாக இருந்தாலும் அந்த இளைஙனுக்கு அம்மா இருக்கிறாள். 

ஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு????

                சில விஷியங்கள் இப்படித் தான் இருக்கும்போது தெரிவதில்லை.