ஞாயிறு, டிசம்பர் 20, 2009











நீண்ட நாளுக்கு பிறகு ஒரு பதிவு.
கமலும் காதலும்... "கம்மர்கட்"

சென்ற வாரம் சனிக் கிழமை ஹெலோ எஃப்ம்ல் மதியம் 12 மணி முதல் மாலை 04 மனி வரை "கமலும் காதலும்" நிகழ்சியை 04 மணி நேரம் தொகுத்து வழங்கினேன். அதில் சிலவற்றை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பேச்சு 01
கமல் ஒரு குழப்பும்வாதி நடுத்தர வயதில்.கமல் ஒரு குழப்பவாதி இந்த வயதில். பேசாமல் பேசி, சொல்ல வரும் கருதுக்களை சொல்லி முடித்து,பட்டிக்காட்டு பாமரன் முதல்,அனைத்தும் அறிந்த அறிங்ஙர் பெரு மக்கள் வரை எல்லோரயும் யோசித்து குழம்ப வைக்கும் நிஜ குழப்பவாதி.எப்படியாவது சினிமாவில் நுழைந்தேயாக வெண்டும் என்று எண்ணி, தங்கமணி என்ற நடன உதவியாளரிடம் நடன உதவியாளராக சேர்ந்தார்.அந்த நேரத்தில் தான் "அன்னை வேளாங்கண்ணி" படத்தில் ஒரு பாடல் காட்சியில், இயேசுவாக சிலஉவை சுமந்து நடித்தார். சில காலம் காலத்தயும் சுமந்து, பிறகு இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளராக, உஙகளுடன் வருகிறேன் என்டற உடன் " நீ நடிக்கலாமே என்றார்.உடனே பனிவின் சிகர‌மான கமல் சொன்ன வார்தை தான் இது. "நானே ஓணான் மாதிரி இருக்கேன், என்னப் போயி...?"என்று கேட்டிருக்கிறார். புரட்சித் தலைவருக்கும், பாலச்சந்தருக்கும் பிடித்து விட்டது போலும்.

அன்றே கமலுக்கு அடித்தது யோகம்.
இந்த மாபெரும் கலைனனை
அடையாளம் ண்டது தமிழ் சினிமாவின்
ஒப்பற்ற யாகம்.
(தொடரும்)...