ஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு????
புதன், ஜூன் 20, 2012
ஆனால், காதலிக்காக அம்மாவை இழந்த ரகுவிற்கு????
செவ்வாய், ஜூன் 19, 2012
இசையின் திசையில்...
பாடல்
|
:
|
கங்கைக்கரை
மன்னனடி
|
|
படம்
|
:
|
வருஷம்-16 (1989)
|
|
பாடியவர்
|
:
|
K.J.யேசுதாஸ்
|
|
இசையமைப்பாளர்
|
:
|
இளையராஜா
|
|
பாடல்
|
:
|
இன்றைக்கு
ஏனிந்த ஆனந்தமே
|
|
படம்
|
:
|
வைதேகி
காந்திருந்தாள்(1984)
|
|
பாடியவர்
|
:
|
ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
|
|
இசையமைப்பாளர்
|
:
|
இளையராஜா
|
|
பாடல்
|
:
|
கொஞ்ச
நேரம் கொஞ்ச வேண்டும்
|
|
படம்
|
:
|
சந்திரமுகி(2005)
|
|
பாடியவர்
|
:
|
ஆஷா பான்ஸ்லே
மதுபாலகிருஷ்ணன்
|
|
இசையமைப்பாளர்
|
:
|
வித்யாசாகர்
|
1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய..."அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது!
1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்!
6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
![]() |
| சின்ன தம்பி படத்தில் குஷ்பூ |
பாடல் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990) பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம் இசையமைப்பாளர் : இளையராஜா.
வெள்ளி, ஜூன் 15, 2012
நினைவில் நின்றவை-1
நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு " உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது? எதற்காக அந்த கலரை பிடிக்கும்" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால் இனிமே நான் உங்க நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!
திங்கள், ஜனவரி 31, 2011
நான் ரசித்த ஹலோ எப்.எம்.அக்டோபர் 2ம் தேதி 2006ம் தேதி சென்னை மக்களின் புதிய பொழுது போக்கு மற்றும் ஜனரஞ்சகமான விஷியங்களுக்காக , "நல்ல இசை, செல்லத் தமிழ்" என்ற தாரக மந்திரத்தோடு, சின்னக் குழந்தையாக, செல்லக் குழந்தையாக , ஹலோ எப்.எம் 106.4. இனிதே உதயமானது. அது வரை, ம்ற்ற பண்பலைகளை கேட்டு, கேட்டு, போரடித்த சென்னை வாசிகளுக்கு, இது புது வரவு, அதிக மன நிறைவு, என்றே சொல்லலாம். நிகழ்ச்சிகளில் புதிய யுக்திகள் என்று மட்டுமில்லாமல், புதிய சிந்தனைகளுடன் படித்த அறிவாளி முதல், பட்டிக் காட்டு பாமரன் வரை, எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கும் கொட்டும் முரசாக மாறியதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக சென்னை வாசிகளின் அசைகக முடியாத பேராதரவோடு, தமிழகத்தின் பண்பலை வரிசைகளில் முன்னனி இடத்தை பெற்று தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தது.
கேட்க தொடங்கி விட்டால், பிறகு இதை விட்டு வெளியேருவது கஷ்டம் என்ற, நல்ல நிலை தான் இதற்கு காரணம்.
மற்ற ரேடியோ நிறுவனங்களுக்கும், ஹலோ எப்.எம் மின் நிகழ்ச்சிகளுக்கும் விதியாசங்கள் அதிகம். இந்த ஒரு காரணத்துக்காகவே, அதிகப் படியான நேயர்களைப் பெற்றுள்ளது. களத்தில் விளையாடும் கிரிக்கெட்டைப் போலவே, விளையாட முடியும் என்பதை செய்து, சாதித்துக் காட்டியது, மிகப் பெறிய சாதனையே!. இதை பின் பற்றி இன்று, இதைப் போலவே நிறைய இடங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தொலை பேசியின் வாயிலாக நேயர்கள், ரன்களை கணித்து சொன்னால், பணத்தை வெல்லலம், என்பதே இதன் நோக்கம்.
நேயர்களுடன் இணைந்து, தானும் ஒரு நேயராக, மனிதாபிமான மனிதனாக இணைந்தார், பத்ம ஸ்ரீ கமல்ஹாசன். எச்.ஐ.வி யால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக தலா 750 ரூபாய் நிதியாக, ஹலோ எப். எம் , மின் நேயர்களிடமிருந்து பெறப் பட்டது. இதன் முதல் முயற்சியாக பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.
மட்டுமன்றி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நேயர்ரக, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ஈடுபட்டிருப்பதால் அதிகப் படியான விஷியங்களை உணர முடிகிறது.
திங்கள், ஜனவரி 04, 2010
பல கேள்வி, ஒரே பதில்
* ராம - ராவண யுத்தம் எத்தனை மாதங்கள் நடந்தது?
* தேவ அசூர யுத்தம் எத்தனை நாட்கள் நடந்தது?
* பாரதப் போரில் எத்தனை வகைப் படைகள் பங்கு பெற்றன?
* மகா பாரதம் எத்தனை பர்வாக்களாக அமைந்துள்ளது ?
* பகவத் கீதை எத்தனை அத்தியாயங்களை கொண்டது?* ஐயம் என்றால் சம்ஸ்கிருத மொழியில் எந்த எண்ணை குறிக்கும்?
* ராஜ நாகன் எத்தனை அடிகள் வரை வளரும்?
* "ஆக்டோ தேரிமோ" என்றால் என்ன?
* ஊட்டு பூட குறைந்த பட்ச வயது எத்தனை?
* கிசா பிரம்மீட்டில் பதிக்கப் பட்ட கல்லின் அகலம் எத்தனை அடி?
* சித்தர்கள் எத்தனை பீர்?
* பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எத்தனை?
* புராணங்கள் எத்தனை?
* ஆடிப் பெருக்கை இப்படியும் சொல்லுவார்கள்?
* தென் அமெரிக்க பிராணி ஒன்று, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
* இலக்கிய கோமான் சோட்டன் எந்த வயதில் இறந்தான்?
ஞாயிறு, ஜனவரி 03, 2010
ஏ.சே.திலீப்குமார் (எ) ரஹ்மாஃன்.
வாழ்க்கைக் குறிப்பு:
ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது. இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எஸ். விஸ்வநாதன்" ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன்"உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் மின்சாரக்கனவும்,லகான் இந்தி படமும்,படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005
இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
தொடரட்டும் ஆஸ்கார் தமிழ் மகனின் சாதனைகள்
செவ்வாய், டிசம்பர் 29, 2009
2010 இப்படி இருக்குமோ?
* நிலாவில் தண்ணீர் கண்டு பிடித்து விட்டதால்,வருடம் முடிவதற்குள் அங்க ஒரு நீச்சல் குளம் கட்ட படலாம்...
* மாநில கவர்னர் (திவாரி) "கில்மா" புகாரில் சிக்கினதால,இந்த ஆண்டு நெறைய முதல்வர்கள் இப்படி பட்ட புகாரில் சிக்கலாம்...
* போன ஆண்டு ஊட்டியில் நிலச்சரிவு வந்ததால,இந்த வருடம் எற்காடுல வர வாய்ப்பு இருக்கலாம்...
* ப.சிதம்பரம் மேல ஷூ வீசனதால இந்த வருடம் , வேற எந்த தலைவர்கள் மேல "முறம்" வீச படலாம்...
*குடி மகன்கள் போன வருஷத்த விட பெருகிப் போயிட்டதால, சரக்குத் துறை வருமானம் ஐம்பது முதல்எனபது கோடிகள் தாண்டும்.....
* இளைய தளபதியின் வெற்றிகரமான பத்தாவது தோல்வி படம் வெளிவரலாம்...
*என் தங்கத் தலைவன் ஜே கே. ரித்தீஷ்கு அமைச்சர் பதவி கெடைக்கலாம்....தன்மானத்தோடு அந்த பதவியை என் தலைவன் தூக்கி எறியலாம்...
* கடைசியாக என்னுடைய பதிவை அரங்கேற்றம் செய்யலாம்.....
அனைவருக்கும் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .




