
அடர்ந்த காடுகளின் ஊடாக
கடந்து போனால் தவழ்ந்து
வருகிறது அந்த கிராமத்து தென்றல்
பச்சை பட்டடை
போர்த்தியது போல
வானுயர்ந்த மரங்கள்,
தவழ்ந்து வரும் மக்களை
அழைத்து அட்சதை தூவும்
அழகிய மலர் தோட்டங்கள்
காதலர்களுக்காகவே கடவுளால்
தரப் பட்ட அந்த
அழகிய கம்மாக்கரை...
கம்மக்கரைக்கு போட்டு
வைத்தது போல அந்த
மொட்டை பாலம்
ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள
பாட்டியம்மாவின் பெட்டி கடை...
பல்லாங்குழி ஆடும்
பள்ளி சிறுவர்கள்...
ஏர் கலப்பையை முதுகில்
தூக்கி சுமந்தபடி
செல்லும் உழவன்...
போர்த்தியது போல
வானுயர்ந்த மரங்கள்,
தவழ்ந்து வரும் மக்களை
அழைத்து அட்சதை தூவும்
அழகிய மலர் தோட்டங்கள்
காதலர்களுக்காகவே கடவுளால்
தரப் பட்ட அந்த
அழகிய கம்மாக்கரை...
கம்மக்கரைக்கு போட்டு
வைத்தது போல அந்த
மொட்டை பாலம்
ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள
பாட்டியம்மாவின் பெட்டி கடை...
பல்லாங்குழி ஆடும்
பள்ளி சிறுவர்கள்...
ஏர் கலப்பையை முதுகில்
தூக்கி சுமந்தபடி
செல்லும் உழவன்...
ஒற்றையடி பாதையில்
ஒரு மனிதனாக
செல்லும் ஓர் கிழவன்...
ஒரு மனிதனாக
செல்லும் ஓர் கிழவன்...
பட்டனத்தில் படிக்க
செல்லும் பெண்களின் ஒரு கூட்டம்,
பெண்களை நோட்டமிட்டபடி
செல்லும் ஆண்களின் மறு கூட்டம் ...
சிறு வயதில் பட்டம் விடவும்
பம்பரம் விடவும் கிடைத்த
பழைய நண்பர்கள்...
நீச்சல் கற்றுக் கொண்ட
அந்த செட்டியார் விட்டு
வட்ட கிணறு...
ஊரின் ஒதுக்கு புறத்தில்
மௌனம் காக்கும்
கல்லறைகள்...
செல்லும் பெண்களின் ஒரு கூட்டம்,
பெண்களை நோட்டமிட்டபடி
செல்லும் ஆண்களின் மறு கூட்டம் ...
சிறு வயதில் பட்டம் விடவும்
பம்பரம் விடவும் கிடைத்த
பழைய நண்பர்கள்...
நீச்சல் கற்றுக் கொண்ட
அந்த செட்டியார் விட்டு
வட்ட கிணறு...
ஊரின் ஒதுக்கு புறத்தில்
மௌனம் காக்கும்
கல்லறைகள்...
இப்படியாக பல வருடங்களுக்கு
பிறகு மலர்கிறது என்
ஞாபக வெளிகளில் ..
"கற்பனை என்ற குறிஞ்சி பூ"
கண்ணீர் கண்ணீர் சிந்த
கடந்து போகிறேன்....
என் சொந்த கிராமத்திற்குள்...
கவலையை மறந்து....
" கிராமத்து தென்றல்"...